உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபுரியில் தேர் திருவிழா

குமாரபுரியில் தேர் திருவிழா

விழுப்புரம்: வளவனுார், குமாரபுரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் தங்க கவசத்தில் அம்மன் திருத்தேர் விழா நடந்தது.


பிரம்மோற்சவ திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் வாகனங்களில் வீதியுலா நடந்தது.


நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு தங்கக் கவசத்தில் அம்மன் திருத்தேர் புறப்பட்டது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.


இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும், விமானத்தில் அம்மன் வீதியுலா, துவஜா அவரோகணம் கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.


வரும் 28 ம் தேதி இரவு 7:00 மணிக்கு மகா கும்ப பள்ளயம் நடக்கிறது. ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !