உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

சின்னமனூர்: சின்னமனூரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. பங்கேற்ற பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என முழக்கமிட்டு பரவசமடைந்தனர்.


தேனி மாவட்டம் சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் பழமையான வரலாற்று சிறப்புமிக்க கோயில் ஆகும். இங்கு பெருமாள் சுமார் 9 அடி உயரத்தில் தானகஸ்த கோலத்தில் நின்று காட்சியளிக்கிறார். பெருமாள் காலடியில் ஆஞ்சநேயர் இருப்பது தனி சிறப்பு ஆகும். இக்கோயிலில் வழிபட திருமண தடை நீங்கும், நோய்கள் குணமாகும் என அர்ச்சகர்கள் கூறுகின்றனர். இக்கோயில் கும்பாபிஷேகம் 2005 ல் நடந்தது.


பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அறங்காவலர் குழு தலைவர் குமரேசன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் இணைந்து கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை துவக்கினர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் பிப் . 19 காலை துவங்கி நேற்று காலை வரை 5 கால யாக பூஜைகள் நடந்தது. காலை 9:30 மணிக்கு யாத்ராதானத்தை தொடர்ந்து காலை 10:44 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடந்தது. புனித நீர் பட்டாச்சாரியார்களால் ஊர்வலமாக கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, புனித நீர் கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார்கள். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டனர்.


பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய சீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. திருப்பணி, கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை செயல் அலுவலர் நதியா, அறங்காவலர் குழு தலைவர் குமரேசன் ஒருங்கிணைத்தனர்.


வட்டமிட்ட கருடன் நேற்று காலை கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பு காலை 10.22 மணிக்கு கருடன் ஒன்று லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கோபுரத்தின் அருகே வடக்கு திசையில் 5 நிமிடங்கள் வட்டமிட்டது. கருடன் வட்டமிட்டதை கண்ட பக்தர்கள் பரவசத்துடன் கருடனை பார்த்து வணங்கினர்.


கும்பாபிஷேகத்தில் பங்கேற்றவர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கண்ணம்மா கார்டன் ராஜேந்திரன், கோகுலகிருஷ்ணா, ஹரி தேவ் சேதுபதி, வர்த்தக சங்க தலைவர் உதயக்குமார், ராமா ஜூவல்லர்ஸ் வெங்கடேஷ் குப்தா, சீனிவாசா குப்தா, அட்வகேட் சிங்காரவேலன், ராம விலாஸ் ஜுவல்லரி மணிகண்டன், ரவி, லட்சுமி ஜூவல்லர்ஸ் நடராஜன், சரண்யா டிரஸ்ஸஸ் வேல்முருகன், நகர் முன்னாள் தி.மு.க. செயலாளர் மயில், வெங்கடேஷ், சூரியா ஏஜென்சி அழகுவேல், ஜெயசக்தி ஸ்டோர் பழனிசாமி, ஜெயராம் கன்ஸ்ட்ரக்சன் ஜெயராம், கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர் சங்க தலைவர் ரவிச்சந்திரன், எஸ்.ஏ.பி. மெட்ரிக் பள்ளி தாளாளர் கண்ணன், செயலர் முருகன், வழக்கறிஞர்கள் அருண் ஜவஹர், மாரிச் செல்வம், ஐயப்பா சேவா சங்கம் பெருமாள், லோகேந்திரராஜன், சரஸ்வதி ஜூவல்லர்ஸ் சிவமூர்த்தி, விவசாய சங்க தலைவர் ராஜா, நல்லு டிரைவிங் ஸ்கூல் நிர்வாகி நல்லு, மக்கள் மருந்தகம் நாகராஜன், ஹிந்து முன்னணி பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !