உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் வைரத்தேர் வெள்ளோட்டம் வடம் இழுத்த பக்தர்கள்

மானாமதுரையில் வைரத்தேர் வெள்ளோட்டம் வடம் இழுத்த பக்தர்கள்

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதர் கோயிலில் 60 ஆண்டுக்கு பின் புதிதாக தயாரிக்கப்பட்ட வைரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு, மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தது.


இக்கோயிலில் சுவாமிக்கு புதிதாக வைர தேர் தயாரிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன் கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்தது.


தொடர்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடந்து, நேற்று காலை பூர்ணாஹூதிக்கு பின் சிவாச்சாரியார்கள் தேரில் புனிதநீர் தெளித்தனர். தேரில் உள்ள கருப்பருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்தனர்.


தீபாராதனைக்கு பின், நேற்று காலை 11:15 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து, வைரத்தேர் வெள்ளோட்டம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தது.


தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்த போதும், விழாவிற்கு போதிய போலீசார் நியமிக்கவில்லை. இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !