அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா
ADDED :18 hours ago
அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நடந்த தேர் திருவிழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மகோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனை தொடர்ந்து, 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் இரவு ரணகளிப்பு நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று மாலை அம்மன் தேரோட்ட நிகழ்வு நடந்தது. பின் அம்மனுக்கு தீபாராதனையை, தொடர்ந்து மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் செல்வம், அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இன்று (24ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.