கோவில்களில் மண்டல பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :218 days ago
உடுமலை: உடுக்கம்பாளையம் ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் கோவிலில் மண்டலாபிேஷகத்தையொட்டி சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது.
உடுமலை அருகே உடுக்கம்பாளையத்தில், ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் கும்பாபிேஷகம், கடந்த 22ல் நடந்தது.
கும்பாபிேஷக விழா நிறைவு பெற்றதும், மண்டலாபிேஷகம் துவங்கியுள்ளது. இதையொட்டி, நாள்தோறும் சிறப்பு அலங்கார, அபிேஷக பூஜைகள் நடைபெற்று வருகிறது.
* குரல்குட்டை மடத்துாரிலுள்ள ஸ்ரீ உச்சிமாகாளியம்மன், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம், கடந்த 20ம் தேதி நடந்தது. தொடர்ந்து அக்கோவிலில், மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் நடைபெறும் சிறப்பு அலங்கார பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.