ஓசூரம்மன் கோவில் உண்டியல் மூலம் ரூ.1.87 லட்சம் வசூல்
ADDED :4686 days ago
பள்ளிப்பட்டு : பெருமாநெல்லூர் ஓசூரம்மன் கோவில் உண்டியல் மூலம், 1.87 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்து உள்ளது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான, பெருமாநெல்லூர் ஓசூரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இக்கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி, கோவில் மண்டபத்தில் தக்கார் ஜெயசங்கர் முன்னிலையில் நேற்று நடந்தது. இப்பணியில் கோவில் பூசாரி சுப்பிரமணியம் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியலில், 1.87 லட்சம் ரூபாய் பணம் காணிக்கையாக கிடைத்தது.