உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை

பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் மாசி மக உற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.


இதில் மூன்றாம் நாள் உற்சவம் நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் உற்சவ பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் .


மாசி மக உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக வரும் மார்ச் 3ந்தேதி காலை 6:30 மணிக்கு கிள்ளை கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !