உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினம்.. கோலாகல கொண்டாட்டம்!

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினம்.. கோலாகல கொண்டாட்டம்!

ஒரு வார்த்தையை உச்சரிக்கும் போதே மனதிற்குள் இனம்புரியாத சந்தோஷமும், கம்பீரமும், தைரியமும், பொறுமையும்,வீரமும் பீறிட்டு எழும்.

அந்த வார்த்தை சுவாமி விவேகானந்தர் என்பதேயாகும். ரிஷிகளுக்கும்,முனிவர்களுக்கும் மட்டுமே சொந்தம் என்று சொல்லப்பட்டுவந்த ஆன்மிகத்தை சாமனிய மக்களுக்கு கொண்டுவந்தவரும்,அமெரிக்காவின் சிகோகோ நகரில் சகோதர,சகோதரிகளே’ என்ற வார்த்தை பிரயோகத்தோடு ஆற்றிய சொற்பொழிவின் மூலம் உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தவரும்,மொத்த இந்தியாவையும் யார் இவர் என விரும்பி கேட்க வைத்தவரும்,பகவான் ராமகிருஷ்ணரின் சீடராக இருந்து பக்தி மார்க்கத்தையும்,ஞான மார்க்கத்தையும் கற்றுணர்ந்தவரும்,இந்தியாவை காலால் அளந்தவரும்,இளைஞர்களை தன் நாவால் கவர்ந்தவரும்,39 வயதில் மண்ணைவிட்டு பிரிந்தாலும்,150 ஆண்டுகளாகியும் மக்கள் மனதில் நின்று ஆள்பவருமான, சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினம் நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அன்றைக்கு மட்டுமல்ல இன்றைய இளைஞர்களுக்கும் தேவையான கருத்து கருவூலமாகயிருக்கும் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை இந்த 150 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் மூலமாக மீண்டும் பள்ளி குழந்தைகளிடம், இளைஞர்களிடம்,பொதுமக்களிடம் கொண்டு செல்லும் புனித பணியில் தினமலர் இணையதளமும் தன் பங்கிற்கு இணைந்தும், முனைந்தும் செயல்படுகிறது. சுவாமி விவேகானந்தரின் வரலாறு, பெரும்பாலான செய்திகள், பதிவுகள்,புகைப்படங்கள், பொன்மொழிகள், கதைகள், போட்டிகள், கட்டுரைகள், மற்றும் அறிஞர் பெருமக்களின் கருத்துக்கள் ஆகியவற்றை சுவைபட தெரிந்து கொள்ள.. கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !