உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முடுவார்பட்டியில் சொர்ண வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முடுவார்பட்டியில் சொர்ண வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பாலமேடு: முடுவார்பட்டியில் சொர்ண வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.


இதையொட்டி மார்ச் 7ல் சிறப்பு யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை புண்யாக வாசனம், கோமாதா பூஜை, மூல மந்திர ஹோமம், தீப ஆராதனை, ஆசீர்வாத திருமறைகள் முடிந்து, கடம் புறப்பாடானது.


மணிகண்ட சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வராகிதாசன் மோகன் அடிகளார், கிராம மக்கள் செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !