பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா
ADDED :1 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வடகரையில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பகவதியம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயில் மாசித்திருவிழாவிற்காக பிப்., 24ல் சாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மார்ச் 2ல் திருவிழா துவங்கியது. அம்மன் தினமும் இரவு காளை, அன்னபறவை, புஷ்ப பல்லாக்கு, சிம்ம வாகனங்களில் முக்கிய வீதிகளில் உலா வருகிறார். தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். நாளை கரகம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம், நாளை மறுநாள் மார்ச் 11ல் பால்குடம், காவடி எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள்,கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.