சிம்மம்: போக்கிரி பொங்கல்!
தன்னை உணர்ந்து பிறருக்கு வழிகாட்டும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சூரியன் அனுகூல பலன் தரும் வகையில் ஆறாம் இடத்தில் உள்ளார். சனி, ராகு தைரியம், செயல், புகழ் வளரும் வகையில் மூன்றாம் இடத்தில் அமர்வு பெற்றுள்ளனர். மாத முற்பகுதியில் சுக்கிரன், புதன் தன் பங்கிற்கு நல்ல பலன்களை வழங்குவர். எதிரிகள் செய்கிற கெடு செயல்களை, அவர்கள் வழியிலேயே போக்கிரித் தனமாக சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். வீடு, வாகன வகையில் அபிவிருத்தி பணி செய்வீர்கள் . புத்திரர்கள், நண்பர்களிடம் கருத்து வேறுபாடு கொள்கிற சூழ்நிலை இருக்கும். பூர்வ சொத்துக்களில் கிடைக்கிற பணவரவுக்கு ஏற்ப புதிய இனங்களில் செலவுகளும் ஏற்படும். உடல்நலம் பலம்பெறும். நீண்டகால கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். தம்பதியர் புரிந்து செயல்பட்டு மகிழ்ச்சிகரமான வாழ்வு நடத்துவர். நண்பர்கள் உதவுவதும் உதவி பெறுவதுமான நன்னிலை உண்டு. பயணங்கள் பயன் தரும். தொழிலதிபர்களுக்கு ”மாரான லாபம் கிடைக்கும். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணமும் வசூலாகும். வியாபாரிகள் அதிக கொள்முதல் செய்து விற்பனையை உயர்த்துவதில் தகுந்த ஆர்வம் கொள்வர். எதிர்பார்ப்புகள் திட்டமிட்டபடி நிறைவேறும். பணியாளர்கள் ஆரோக்கிய உடல்நிலை அமைந்து சுறுசுறுப்பாக செயல் படுவர். கூடுதல் வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் நல்ல குணங்களை உறவினர்களிடம் சொல்லி மகிழ்வர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். பணி புரியும் பெண்களுக்கு நிறைந்த சலுகைகள் கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் தெய்வ நம்பிக்கையுடன் உற்பத்தி, விற்பனை செழிக்க தேவையான பணிபுரிவர். உபரி பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களிடம் மதிப்பு, மரியாதை பெறுவர். விவசாயிகளுக்கு அதிக மகசூல், கால்நடை வளர்ப்பில் தாராள பணவரவு உண்டு. மாணவர்கள் வெளியில் சுற்றுவதைக் குறைப்பதால் படிப்பில் தகுந்த தேர்ச்சி கிடைக்கும்.
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் எதிரிகளின் தொல்லை விலகும்.
உஷார் நாள்: 16.1.13 மதியம் 3.02- 18.1.13
இரவு 11.10.
வெற்றி நாள்: பிப்ரவரி 2, 3, 4
நிறம்: சிமென்ட், வெள்ளை எண்: 2, 4