உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி வெள்ளி: குனியமுத்தூர் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

பங்குனி வெள்ளி: குனியமுத்தூர் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை; பங்குனி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மூலவர் அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்துடன் சர்வ புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோன்று கோவை என். எச். ரோடு - டவுன்ஹால் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது இதில்.புஷ்ப அலங்காரத்தில் மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  இந்த இரு நிகழ்வுகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !