வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமநவமி உற்சவம்
ADDED :213 days ago
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடந்தது.
விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் கடந்த 19ம் தேதி முதல் துவங்கி, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.
உற்சவத்தையொட்டி, தினமும் கோவிலில் மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை ராமநாம சங்கீர்த்தினம் நடக்கிறது.
நேற்று கோவிலில் ராமநாம சங்கீர்த்தனத்தோடு, வைகுண்டவாச பெருமாள் ராமர் கோலத்தில், சீத்தா, லட்சுமணனோடு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.