அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை
ADDED :1 days ago
விழுப்புரம்: விழுப்புரம் மகாராஜபுரம் ஹவுசிங் போர்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 16ம் தேதி காலை 8:00 மணிக்கு கணபதி பூஜையும், காலை 10:00 மணிக்கு கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து, 18ம் தேதி காலை 9:00 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. இதையடுத்து, நேற்று காலை 11:00 மணிக்கு அம்மன் வீதியுலா, அங்காளம்மன், பாவாடைராயன், குறவன், குறத்தி, காளி, வீரன், காட்டேரி, வெள்ளாழக்கண்டன், பெரியாயி வேடம் அணிந்து வீதியுலாவும், மாலை 4:00 மணிக்கு மயானக்கொள்ளையும் நடந்தது.