உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


இதனை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்குமேல் கொடிபட்டம் மாட வீதிகள், ரத வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கொடிமரத்தின் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து காலை 8:56 மணிக்கு ஸ்ரீ வாரி பிரபு பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். திரளான பக்தர்கள் பங்கேற்று ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர். விழாவில் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தினமும் காலை 10:00 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு 7:00 மணிக்கு வீதியுலாவும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா ஏப்.1ல் நடக்கிறது. அன்று காலை 7:20 மணிக்கு செப்பு தேரோட்டமும், இரவு 7:00 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் ஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. ஏப்.5 மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் புஷ்பயாகத்துடன் விழா முடிவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !