திருக்காமீஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்ட அற்புத காட்சி; பக்தர்கள் பரவசம்
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.
வில்லியனுாரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று தேதிகளில் சூரிய பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று சூரிய பூஜை விழா நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு மேல் தெள்ள தெளிவாக சூரிய ஒளி கோவிலின் சித்திரை மண்டபம், ராஜகோபுரம், அர்த்த மண்டபம் வழியாக மூலஸ் தானத்தில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்டது. இந்த அற்புத காட்சியை வில்லியனுார் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள், சிவாச்சார்யர்கள் மற்றும் பக்தர்கள் திரளான கலந்துகொண்டு வழிபட்டனர். இன்று காலை 6:00 மணியளவிலும் சூரிய பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருக்காமீஸ்வரன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.