உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு விழா கோலாகலம்

சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு விழா கோலாகலம்

கோவை: சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில், 57வம் ஆண்டு ஆறாட்டு திருவீதியுலா கோலாகலமாக நடந்தது.

கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி பொற்கோவிலில், 57ம் ஆண்டு ஆறாட்டு திருவீதியுலா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும், சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. எட்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவில், நேற்று பள்ளி வேட்டை நடந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான, ஆறாட்டு திருவீதியுலா இன்று மாலை நடந்தது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்ப சுவாமி புலி மேல் அமர்ந்த நிலையில் திருவீதியுலா வந்தார். ரதத்தின் முன்பு, பஞ்சவாத்தியம், காவடியாட்டம், சிங்காரிமேளம், தெய்யம் உள்ளிட்டவைகள் வர, ஐயப்பனின் பின்னால், பட்டம் சூட்டப்பட்ட மூன்று யானைகள் கம்பீரமாக ஆறாட்டு திருவீதியுலா வந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட திருவீதியுலா, சின்னசாமி ரோடு, சக்தி ரோடு, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு வழியாக மீண்டும் கோவில் அருகே உள்ள குளத்தை அடைந்தது. தொடர்ந்து, இரவு, கொடியிறக்கம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !