உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 

அதனையொட்டி, நேற்று 23ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து 20 பட்ட ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் 5:20  மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, 11:00 மணிக்கு வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி கிரிவலம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு வெள்ளி நாக வாகனத்தில் உற்சவர் அருள்பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வரும் மார்ச்  31ம் தேதி காலை 6:00 மணிக்கு நடக்கிறது. வரும் 1ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 2ம் தேதி முத்து பல்லக்கில் சுவாமி கிரிவலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !