திருமூர்த்திமலை கோவிலில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கல்
ADDED :9 hours ago
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் பணி துவங்கியது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு உரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெயில் காரணமாக, பக்தர்கள் பாதிப்பதை தடுக்க, பணியாளர்கள் நியமித்து, தரையில் நீர் அடிக்கப்பட்டு வருகிறது.மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இன்று முதல் நீர் மோர் வழங்கும் பணி துவங்கியுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும், கோடை காலம் முடியும் வரை, நீர் மோர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.