உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரைத்திருவிழா வீதி உலா மீனாட்சி அம்மன் கோயில் அறிவிப்பு

மதுரை சித்திரைத்திருவிழா வீதி உலா மீனாட்சி அம்மன் கோயில் அறிவிப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 19 முதல் 30 வரை நடக்கிறது. இந்நாட்களில் அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவில் வீதி உலா வருவர்.

விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு, மாசி வீதிகளில் சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் வியாபாரிகள் பந்தல் அமைக்க வேண்டும். வேப்பிலைத் தோரணங்களை சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைக்க வேண்டும். வீதி உலாவில் சுவாமி சாத்துப்படிக்கு கேந்திபூ, மருதைவேர்கள் வைத்துக் கட்டப்பட்ட மாலைகள் ஏற்கப்படமாட்டாது. திருக்கல்யாணத்தன்று மூலஸ்தான அம்மன், சுவாமிக்கும், உற்ஸவர் அம்மன் சுவாமிக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் மட்டுமே பட்டுப் பரிவட்டங்கள் சாத்தப்படும். உபயதாரர், பக்தர்கள் வழங்கும் காணிக்கை பரிவட்டங்கள் வாமாலையாக சூட்டப்படும். மேற்படி உற்ஸவம் ஆரம்பம் முதல் அழகர்கோவில் கள்ளழகர் ஆஸ்தானம் சேரும் மே 16 வரை கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபயதிருக்கல்யாணம், தங்க ரதம் உலா நடத்தப்படாது.

திருக்கல்யாணம்: சித்திரைத்திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.,28 காலை 8:35- மணிக்கு மேல் 8:59 மணி-க்குள் நடக்கிறது. இதை முன்னிட்டு நன்கொடையாளர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், மஞ்சள் கயிறு, குங்குமம் பாக்கெட்டுகள், இதர அனைத்து பொருட்களையும் கோயில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கி ரசீது பெற்றுக் கொள்ளலாம். இப்பொருட்கள் தொடர்பாக எந்த ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திடமோ தொடர்பு கொள்ள வேண்டாம். அவ்வாறு தனி நபர்கள் அணுகினால், கோயில் நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம் என இணைகமிஷனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !