உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி கோவில் திருவிழா; பேட்லா கிராமத்தில் கோலாகலம்

கோத்தகிரி கோவில் திருவிழா; பேட்லா கிராமத்தில் கோலாகலம்

கோத்தகிரி: கோத்தகிரி கொனவக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட, பேட்லா கிராம கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது. காலை, 9:00 மணி முதல், பகல் 2.00 மணி வரை அலங்கரிக்கப்பட்ட, ஸ்ரீ மாகாளியம்மன் திருவீதி உலா நடந்தது. காலை, 9:00 மணி முதல் பகல், 2:00 மணி வரை, ஸ்ரீ மாரியம்மன் திருதேர் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, 2:00 மணி முதல், 6:00 மணிவரை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, கிராம முக்கியஸ்தர் பாலகிருஷ்ணன் மற்றும் காரியதரிசி ராமகிருஷ்ணன், செவனா கவுடர்செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !