நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் சிவனடியார்கள் உழவாரப்பணி
ADDED :198 days ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு திருக்கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த திருக்கூடலையாற்றுாரில் ஞானசக்தி, பராசக்தி சமேத நர்த்தன வல்லபேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மகம் மகோற்சவ தேர் திருவிழா, தெப்பல் உற்சவம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடந்து முடிந்தது. சேலம் மாவட்டம் ஆசான் அகத்தியர் உழவார பணி குழுவினர் நர்த்தன வல்லபேஸ்வரர் கோவிலில் நேற்று உழவாரப்பணியை செய்து கோவில் வளாகம், கோபுரங்களில் இருந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். உழவாரப்பணி மேற்கொண்ட சிவனடியார்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.