உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்துக் காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா பக்தருக்கான வசதி தீவிரம்

கொண்டத்துக் காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா பக்தருக்கான வசதி தீவிரம்

பெருமாநல்லுார்: பெருமாநல்லுாரில் உள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, 25ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


விழாவில், 31ம் தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல், அதே தினம் மாலை தேரோட்டம் ஆகியன நடைபெறுகிறது. திருப்பூர், அவிநாசி, குன்னத்துார், நம்பியூர், கோபி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். கோவிலில் பக்தர்கள் வசதிக்காக கோவில் நுழைவு வாயிலில் இருந்து, கோவில் வரையும், கோவில் உள் பகுதியிலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. குண்டம் இறங்கும் இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டு, வரிசையாக குண்டம் இறங்க தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது.


பக்தர்களின் தாகம் தணிக்க, எட்டு இடங்களில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி, கோவில் உள் புறத்தில் ஆறு இடங்களில் குடிநீர் வசதி,‌ அமைக்கப்பட்டுள்ளது. 85 இடங்களில் ‘சிசிடிவி’ கேமரா வசதி, மூன்று இடங்களில் எல்இடி – டிவி வைக்கப்பட உள்ளது. வெயில் கொளுத்துவதால், பக்தர்களை காக்கும் வகையில் கோவில் உள் பகுதியில் 12 இடங்களில் டேபிள் பேன், 10 இடங்களில் சீலிங் பேன் அமைக்கப்பட்டு வருகிறது. கோவில் அருகே , 30 இடங்களில் மொபைல் டாய்லெட், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மஞ்சள் நீர் கிணறு பகுதியில் மூன்று இடங்களிலும் மொபைல் டாய்லெட் அமைக்கப்பட உள்ளது. குண்டம் இறங்கும் பக்தர்கள் குளிக்க ஷவர் பாத்ரூம், பொங்கல் வைக்க அடுப்பு வசதி. மொட்டை போட தனி இடம் ஆகியவற்றை, ஹிந்து அறநிலையத்துறையினர், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !