பங்குனி செவ்வாய், சஷ்டி ; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :194 days ago
கோவை; பங்குனி மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி திதி யை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது இதில் உற்சவர் ராஜ அலங்காரத்துடன் வள்ளி தேவசேனா சமேதராக புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பங்குனி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை என் எச் ரோடு ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த மாகாளியம்மன் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.