புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குலதெய்வ கோவிலில் வழிபாடு.
ADDED :2 days ago
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே உள்ள சித்தணி அய்யனாரப்பன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழிபாடு செய்தார்.
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. என் ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தல் களம் காணுகிறார். நேற்று இரவு முதல்வர் ரங்கசாமியின் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற குலதெய்வ கோவில் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி பூரணி பொற்கலை உடனுறை அய்யனாரப்பன் கோவிலுக்கு வந்த அவர் குலதெய்வத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். மாதம் தோறும் முதல்வர் ரங்கசாமி தனது குலதெய்வ கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து செல்வது வழக்கம்.