பகவதி அம்மன் கோவில் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு.
பந்தலூர்; பந்தலூர் அருகே காட்டிக்குன்னு ஸ்ரீ பகவதி கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பந்தலூர் அருகே காட்டிக்குன்னு ஸ்ரீ பகவதி கோவில் வருடாந்திர திருவிழா, நேற்று நடந்தது. காலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், கொடியேற்றம், முத்தப்பன் பூஜை, மதிய பூஜை, அன்னதானம் மற்றும் கும்பம் ஏற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ பகவதி கோவிலில் இருந்து, அத்திக்குன்னா ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு, அம்மன் எழுந்தருளுதலுடன், கரகம் மற்றும் தாலப்பொலி ஊர்வலம், செண்டை மேளத்துடன் சென்று மீண்டும் பகவதி கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அலங்கார பூஜை தீபாராதனை, முத்தப்பன் பூஜை, மலம்குறத்தி வழிபாடு, இரவு அன்னதானம், ஆற்றங்கரையிலிருந்து அம்மனுக்கு நீர் எடுத்து வருதல், அதிகாலை நாலு மணிக்கு பூக்குழி இறங்குதலும், தொடர்ந்து கொதிக்கும் நேரில் மஞ்சள் நீராட்டம் மற்றும் அருள் வாக்கு பூஜையுடன் விழா அதிகாலை நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சுவாமி உன்னிகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.