அயோத்தி ராமரின் சூரிய திலகம் நிகழ்வை தரிசித்த பிரதமர் மோடி
ADDED :193 days ago
டில்லி: அயோத்தியில் இன்று ராம நவமி விழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து, ஸ்ரீராம நவமி விழாவில் முக்கிய நிகழ்வான சூரிய திலகம் வழிபாடு நடைபெற்றது. சூரியனின் கதிர்கள் ராம்லாலாவின் நெற்றியில் ஒளிரும் அற்புத காட்சி நடைபெற்றது. இதை கோவிலிலும் மற்றும் நேரடி ஒளிபரப்பில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடைபெற்ற இந்த சூரிய திலகம் நிகழ்ச்சியை தனது வீட்டில் இருந்தபடி பிரதமர் மோடி இணையவழியாக ராமர் பெருமானை வழிபட்டு, சூரிய திலகம் நிகழ்வை தரிசனம் செய்தார்.