உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணியில் ராமநவமி உற்ஸவம்: ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் திருமஞ்சனம் நடந்தது

திருப்புல்லாணியில் ராமநவமி உற்ஸவம்: ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் திருமஞ்சனம் நடந்தது

திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் தனி சன்னதி தெர்ப்பசயன ராமர் மற்றும் பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமபிரான் பிறந்தநாளே ராமநவமி ஆகும். நவமி திதியில் வரக்கூடிய பண்டிகை தீமையை வென்று நன்மையினை நிலை நாட்ட வந்ததது ஆகும். இதனை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து ராமாயணம் படித்தனர். ராமர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் உள்ளிட்டவைகள் நடந்தது. திருப்புல்லாணி ஆதி ஜெகநாத கோயிலில் தனி சன்னதியாக உள்ள தெர்ப்பசயன ராமர் அருகே உள்ள அலங்கார மேடையில் ராமபிரான், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட உற்ஸவமூர்த்திகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே விசேஷத் திருமஞ்சனம் நடக்கிறது. தீப, தூப, சோடச சிறப்பு தீபாராதனையும் சந்தன அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. ராமபிரானுக்கு பிடித்த சர்க்கரை பொங்கல், பானகம், மோர், சுண்டல், வெண்பொங்கல் உள்ளிட்டவைகள் நெய்வேத்தியமாக படைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !