உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம்

கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம்

விழுப்புரம்: விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழாவையொட்டி, திருக்கல்யாணம் நடந்தது. கோவிலில், கடந்த 22ம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், திரவுபதி அம்மன், அர்ஜூனனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடந்தது. இதில், எருமணந்தாங்கல், பொய்யப்பாக்கம், மகாராஜபுரம், கீழ்பெரும்பாக்கம், சாலையாம்பாளையம், நாப்பாளைய தெரு, மருதுார்மேடு, காகுப்பம் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வரும் ஏப்ரல் 3ம் தேதி தீ மிதி விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !