பெரியகுளத்தில் ஷீரடி சாய்பாபா ஜெயந்தி விழா
ADDED :1 days ago
பெரியகுளம்; பெரியகுளம் தெற்கு ரத வீதி டாக்டர் தங்கவேல் நகர், ஷீரடி சாய்பாபா கோயிலில், சீரடி சாய்பாபா ஜெயந்தி விழா மற்றும் ராம நவமி விழா கோலகாலமாக நடந்தது. மங்கள ஆரத்தி பூஜை, கணபதி ஹோமம், சாய் அஷ்டோத்திர ஹோமம், ஸ்தவன மஞ்சரி பாராயணம், ஷீரடி சாய்பாபாவிற்கு அபிஷேகத்தை தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.