நல்லவர்க்கு இல்லை நாளும் கோளும் - என்பதற்கான விளக்கம்!
ADDED :4751 days ago
நல்லவனுக்கு நாளும் கோளும் எவ்வித தீங்கும் செய்யாது என்பதையே இப்படி குறிப்பிடுவர். நாள் என்பது நட்சத்திரத்தையும், கோள் என்பது நவக்கிரகங்களையும் குறிக்கும். அருணகிரிநாதர், நாளென்செயும் வினைதான் என்செயும் எனை நாடி வந்த கோள் என் செய்யும் என்று சவால் விடுகிறார். முருகன் அருள் முன், கிரகங்கள் வலிமை இழந்து போகும் என்பதே இதன் கருத்து.