உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூரில் மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்: ஜெயின் மக்கள் பக்தி பஜனை

குன்னூரில் மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்: ஜெயின் மக்கள் பக்தி பஜனை

குன்னூர்; குன்னூரில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு குன்னூர் ஜெயின் சங்கம் மற்றும் ஜெயின் நவியூக் சங்கம் ஆகியவை இணைந்து மகாவீர் ஜென்மோட்சவ் விழாவை நடத்தின


நாடு முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குன்னூரில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு குன்னூர் ஜெயின் சங்கம் மற்றும் ஜெயின் நவ்யுவக் சங்கம் ஆகியவை இணைந்து மகாவீர் ஜனமோத்சவ் விழாவை நடத்தின. குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் துவங்கிய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட் நீதிமன்ற வளாகம் வழியாக ஜெயின் கோவிலை அடைந்தது. கோவிலில்  பஜனை, அன்னதானம் இடம் பெற்றது. ஊர்வலத்தில் ஜெயின் சமூக மக்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியும். நடனமாடியும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !