உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


இதையொட்டி, நேற்று அதிகாலை சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம், காலசந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து தாயார் மண்டபத்தில் உபயநாச்சியார் சகிதம் பெருமாள், உற்சவர் எழுந்தருளச் செய்து, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்திற்குப் பின், விஸ்வக்சேனர் வழிபாடு, பகவத் சங்கல்பம் உள்ளிட்ட பூஜை நடந்தது. யாகம் பூர்த்தி செய்தபின் மேள வாத்தியங்கள் முழங்க பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !