உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தேர் அசைந்தாடி வந்தது. 


மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர பெரு விழாவை 23ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி வெள்ளி நாக, தங்க மயில் வாகனத்தில் உற்சவர் உலா வந்து அருள்பாலித்தார். நேற்று இரவு வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் மலை வலக்காட்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று காலை 6:00 மணிக்கு துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் அசைந்தாடி வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை 1ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்த வாரி உற்சவமும், தொடர்ந்து இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது. 2ம் தேதி முத்து பல்லக்கில் சுவாமி கிரிவலம் நடக்கிறது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !