குன்றக்குடிக்கு காவடி எடுத்த பக்தர்கள்; தீமிதித்தும் நேர்த்திக்கடன்
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால் காவடி பன்னீர் காவடி எடுத்தும் தீமிதித்தும் நிறுத்திக் கடன் செலுத்தினர்.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22ம் தேதி மாலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும் மார்ச் 23ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது. தினமும் இரவு, சண்முகநாதன் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாணமும் பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் தெப்பத் திருவிழாவும் நடந்தது. நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இன்று உத்திர தீர்த்தவாரியும், மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, பறவைக் காவடி எடுத்தும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.