போடி ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை
ADDED :196 days ago
போடி; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு போடி ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை ஐயப்ப பக்த சபை குருநாதர் ஜெயா தலைமையில் நடந்தது. ஐயப்ப பக்த சபை தலைவர் ஆறுமுகம், செயலாளர் செல்வகணபதி, பொருளாளர் பாலு முன்னிலை வகித்தனர். கணபதி ஹோமத்துடன் ஐயப்பனுக்கு 108 சங்கினால் அபிஷேகமும், புஷ்பாஞ்சலி உடன் மலர்களால் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பக்தசபை நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை அர்ச்சகர் கமலக்கண்ணன் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டன.