உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் தேரோட்டம்

திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் தேரோட்டம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு மார்ச் 24ல் கொடிமரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி யுடன் விழா துவங்கியது.


தொடர்ந்து பத்து நாட்களும் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், உபய கருட சேவை, புன்னை வாகனம், சேஷ வாகனம், ஹம்ச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் நான்கு ரத வீதி உலா நடந்து வந்தது. மார்ச் 29ல் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. நேற்று காலை உற்ஸவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாள் மேளதாளங்கள் முழங்க பெரிய தேருக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின் 51 அடி உயர பெரிய தேரை நேற்று காலை 9:45 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. பக்தர்கள் கோவிந்தா, நாராயணா கோஷம் முழங்கினர். காலை 11:50 மணிக்கு தேர் நிலைக்கு வந்தவுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. வாழைப்பழம், புளியம்பழம் உள்ளிட்ட பழங்கள் பக்தர்கள் மீது வீசப்பட்டது. பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல், குளிர் பானம் உள்ளிட்டவைகளை தன்னார்வலர்கள் வழங்கினர். இன்று காலை 9:00 மணிக்கு ஜெகநாத பெருமாள், பட்டாபிஷேக ராமர் சேதுக்கரைக்கு எழுந்தருளி கடலில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !