வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் விமரிசை
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், பங்குனி உத்திர உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருபாளிக்கிறார். இக்கோவிலில், பங்குனி உத்திர உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடைப்பெற்றுது. காலை 5:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடந்து, மல்லிகை, ரோஜா, சாமந்தி, உள்ளிட்ட மலர் மாலை அலங்காரம் செய்யப்பட்டு, உற்சவ மூர்த்திகள் மயில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திகடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவல குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ் மற்றும் அறங்காவல குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.