உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை

பொள்ளாச்சி கோவில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை

பொள்ளாச்சி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில், சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் கோவில் வளாகத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.


ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வள்ளி, தெய்வானையுடன், முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


* கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் நேற்று, பக்தர்கள் பால் குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் வேலாயுத சுவாமிக்கு, பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


உற்சவமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின், பக்தர்கள் கையில் வேல் மற்றும் விளக்குகள் எடுத்து மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்து வழிபட்டனர்.


* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கடந்த 31ம் தேதி பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தன.


நேற்று காலை, நல்லகாத்து ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. மாலையில், கோவில் மண்டபத்தில் சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


நாளை காலை, நல்லகாத்து ஆற்றிலிருந்து பக்தர்கள் அலகு பூட்டியும், பறவைக்காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். மாலையில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி தேவியருடன் எழுந்தருளி திருவீதி உலா சென்று அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !