உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிம்மதியாக வாழ காஞ்சி மகா பெரியவர் சொல்லும் அறிவுரை

நிம்மதியாக வாழ காஞ்சி மகா பெரியவர் சொல்லும் அறிவுரை

* தேவையான அளவுக்கு பணம் சம்பாதித்தால் நிம்மதியாக வாழலாம்.
* தினமும் வீட்டில் பூஜை செய். கோயிலுக்கு செல். பாவம் குறையும்.
* போதும் என்ற மனதுடன் வாழ். ஆடம்பரம் செய்ய மாட்டாய்.
* உனக்கு பிடித்த தெய்வத்தை வணங்கு. மனம் ஒருமுகப்படும்.
* மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கவே கூடாது.
* பெண் வீட்டார் விருப்பமுடன் சீதனம் கொடுத்தாலும் பெறக் கூடாது.
* தேவையில்லாத எந்த பொருளையும் வாங்காதே.
* தோல்வி வரும் போது தான் மனம் அதிகமாக கடவுளின் பக்கம் செல்லும்.
* ஆசை இல்லாவிட்டால் கடவுளின் தரிசனம் கிடைத்து விடும்.
* ஆசை இருக்கும் வரை பிறவி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
* துன்பம் வருகிறதா... நல்ல செயல்களை அதிகமாகச் செய்.
* சாஸ்திரம் சொல்லும் விஷயங்களை செய். ஒழுக்கம் தானாக வரும்.
* புண்ணியம் செய்தால் தேவலோகம் செல்லலாம். பாவம் செய்தால் நரகமே கிடைக்கும்.
* ராம நாமத்தை சொல். மனதில் அமைதி குடி கொள்ளும்.
* கடலில் சேரும் நதி போல் மனம் எப்போதும் கடவுளை சேர வேண்டும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !