உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகர ஜோதியே ஐயப்பா

மகர ஜோதியே ஐயப்பா

மகர சங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதி ஸ்வரூபனாக பொன்னம்பலமேட்டில் காட்சி கொடுப்பார். இதையே மகரஜோதி தரிசனம் என்கிறோம். திருவண்ணாமலைக்கு திருக்கார்த்திகை எப்படியோ, அதைப் போல சபரிமலைக்கு மகரஜோதி தரிசனம். இதன் சிறப்பை அறிந்து கொள்வோமா...

சுவாமி ஐயப்பன் பூமியில் மனிதனாக அவதரித்து மணிகண்டன் என்ற பெயரில் வளர்ந்தார். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்து அவதார நோக்கத்தை நிறைவேற்றினார். பிறகு சபரிமலையில் தவக்கோலத்தில் அமர்ந்தார். அப்போது அவரது தந்தையிடம், ‘தவக்கோலத்தில் இருக்கும் நான், ஆண்டு தோறும் மகர ஜோதி நாளில் கண் விழித்து பக்தர்களுக்கு அருள்புரிவேன்’ என வாக்களித்தார். அப்போது தேவர்கள் விசேஷ ஆராதனை செய்வர். இத்தனை சிறப்பு மிக்க நாளைக் கொண்டாடவே திருவாபரணங்களை யாத்திரையாகக் கொண்டு வந்து அணிவிக்கின்றனர்.

ஐயப்பன் தன் வாக்கை மெய்ப்பிக்கும் விதத்தில் ஆண்டு தோறும் ஜோதி வடிவில் காட்சி தருகிறார். அந்த ஜோதியை தரிசித்தவர் மனிதனாக பிறந்த பயனை அடைவர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !