சபரிகிரி அஷ்டகம்
ADDED :5 hours ago
கும்பகோணம் சேங்காலிபுரம் அனந்த ராம தீட்சிதர் ராமாயணம், மகாபாரதம், பாகவதம், நாராயணீயம் பற்றி இசையுடன் சொற்பொழிவு செய்வதில் வல்லவர். நாம சங்கீர்த்தனத்தை பரப்புவதிலும், பாடல்கள் இயற்றுவதிலும் தெய்வீக ஆற்றல் பெற்றிருந்தார்.
காஞ்சி மஹாபெரியவர், சிருங்கேரி சுவாமிகளின் அன்பிற்கு பாத்திரமான இவர், சபரிமலை ஐயப்பன் மீது பாடிய சபரிகிரி அஷ்டகம் புகழ் பெற்றது. சபரி கிரி – ஐயப்பன் மலை, அஷ்டகம் – எட்டு. எட்டு பாடல்களும் தனித்தனியானவை. தெய்வங்களுக்குரிய எட்டு குணத்தையும், அவரின் பெருமைகளை போற்றுவது அஷ்டகம்.
சபரிகிரி அஷ்டகம் கேட்டால் பாவம் மறையும். பயம் விலகும். நிம்மதி கிடைக்கும். தர்மத்தின் வழியில் மனம் செல்லும்.