உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமான் வீதி உலா

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமான் வீதி உலா

வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 74ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா கடந்த மாதம், 29ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்ற விழாவில் நாள் தோறும் சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. விழாவில், நேற்று இரவு, 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி திருவீதி உலா சென்று அருள்பாலித்தார். ஊர்வலத்தில் கடவுள் வேடமணிந்து வந்த கலைஞர்களை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். விழா ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !