குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா துவக்கம்
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா இன்று துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக கர்நாடக சனாதன சாகித்திய சங்கம் சார்பில், 80வது ஆண்டு கொடியேற்று விழா நடந்தது. ஆழ்வார்பேட்டை கோதண்ட ராமர் கோவிலில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து பால்குடம், அபிஷேகப் பொருட்களுடன் புறப்பட்ட ஊர்வலம், தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து கோவிலில் இருந்து கோதண்ட ராமர் கோவிலுக்கு அம்மன் கொடி எடுத்துச் செல்லப்பட்டது. விநாயகர் கோவில் மண்டபம், கோதண்ட ராமர் கோவில் மண்டபத்தில் அன்னதானம் நடந்தது மாலை 4:30 மணிக்கு கர்நாடகா கலாச்சார நிகழ்ச்சிகளுடன் மங்கல இசை மேலதாளத்துடன் உற்சவர் கொடியுடன் ஊர்வலம் புறப்பட்டு, கொடியேற்றம் நடந்தது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பவனி வருகிறார். நாளை கரக ஊர்வலம், 12ல் பூகுண்டம், 14 ல் திருத்தேர் வடம் பிடித்தல், 17ல் முத்துப்பல்லக்கு, 18ல் புஷ்ப பல்லக்கு, நடக்கிறது. மே 8 ல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.