உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நினைத்ததை அடைய திருவள்ளுவர் சொல்லும் வழிமுறை

நினைத்ததை அடைய திருவள்ளுவர் சொல்லும் வழிமுறை

* மனவுறுதியுடன் இருந்தால் நினைத்ததை அடையலாம்.
* இக்கட்டான நேரத்தில் செய்யப்படும் சிறிய உதவிகூட பெரியதாகும்.
* பிறர் செய்த உதவியை மறக்காதே. ஆனால் அவர்கள் கொடுத்த கஷ்டத்தை மறந்துவிடு.
* விடாமுயற்சி, அறிவு இருந்தால் சிறந்து விளங்கலாம்.  
* பணிவாக இருப்பவரின் பெருமை மலையை விட பெரியது.   
* உன்னிடம் இருப்பதை அறிந்து வாழ். இல்லையென்றால் கஷ்டப்படுவாய்.  
* கோடிப் பொருள் கொடுத்தாலும், ஒழுக்கமானவர் தவறு செய்ய மாட்டார்.
* விடாமுயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.  
* பிறருக்கு கெடுதல் நினைக்காதே. மீறினால் அது உன்னிடமே வரும்.  
* குழந்தை புத்திசாலியாக இருந்தால் பெற்றோர் சந்தோஷப்படுவர்.
* விருந்தினரை விரும்பி வரவேற்கும் வீடு நலம் பெறும்.
* பிறரிடம் இனிமையாக பேசினால் வறுமை வராது.
* ஐம்புலனை அடக்கி வாழ்வது பல பிறவிக்கும் நன்மை தரும்.
* தவறு இல்லாமல் கல்வி கற்று அதன்படி நடக்க வேண்டும்.
* கல்வி இப்பிறவிக்கு மட்டுமல்ல, வரப் போகும் பிறவிக்கும் பயன் தரும்.
* கடவுளை சரண் அடைந்தவருக்கு துன்பம் வராது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !