உழைத்து சாப்பிட சொல்கிறார் பாரதியார்
* பெற்றோர் தேடிய சொத்தில் வாழாதே. உழைத்து சாப்பிடு.
* அறிவைத் தேடிச் செல். செல்வம் தானாக வரும்.
* உதவி செய்ய எவ்வளவு பேர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம்.
* எவ்வளவு இடையூறு வந்தாலும் எடுத்த செயலில் உறுதியாக இரு.
* எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு உதவினால் நீயே உயர்ந்தவன்.
* நம்பிக்கையுடன் முயற்சி செய். வெற்றி உறுதி.
* அறிவு, செல்வம், தைரியம் ஆகிய மூன்றும் அவசியம் வேண்டும்.
* ஒருவர் கஷ்டப்படும் போது அவருக்கு ஆறுதலாக பேசுவதும் தர்மமே.
* எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு. எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு.
* விருந்தினர் போல் நீயும் இந்த உலகில் சிறிது காலமே தங்க வந்திருக்கிறாய்.
* பெண்களின் பங்களிப்பு இருந்தால்தான் குடும்பம் முன்னேறும்.
* காலம் ஓடுகிறது. பருவம் மாறுகிறது. இதை புரிந்து கொள்.
* கஷ்டம் வரும் போதுதான் பல உண்மைகள் தெரிய வரும்.
* கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறார்.
* குழந்தைக்கு கல்வியுடன் விளையாட்டையும் சொல்லிக் கொடு.
* எதையும் உடனுக்குடன் செய்யும் போது வெற்றி நிச்சயம்.