உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு ஜூன் மாதம்,

கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு ஜூன் மாதம்,

முதல்வர் ஜெயலலிதா, ஜூன் மாதம், ஸ்ரீரங்கத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது, கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் விதமாக, அறிவிப்பு வெளியிடுவார் என, அறநிலையத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, கோவில் நிலங்களில், 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருபவர்களுக்கு, அவர்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. கொள்கை விளக்க குறிப்பிலும், அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், இன்று வரை அறிவிப்பு
நடைமுறைபடுத்தப்படவில்லை. அதற்காக, தமிழகத்தில் உள்ள, கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள், ஸ்ரீரங்கத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில், ஜூன் மாதம் ஸ்ரீரங்கத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார். அப்போது, கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, அறிவிப்பு வெளியிடுவார் என, அறநிலையத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !