உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்தலசயன பெருமாள் கோவில் பாரிவேட்டை உற்சவம்

ஸ்தலசயன பெருமாள் கோவில் பாரிவேட்டை உற்சவம்

மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில், பாரிவேட்டைஉற்சவம் கோலாகலமாக நடந்தது. மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயனப் பெருமாள்கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 63வது தலமாக புகழ்பெற்றது. இங்கு, ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று, ஸ்தலசயனப் பெருமாள் குழிப்பாந்தண்டலம் செல்லும் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். இவ்விழா ஜன 16 கோலாகல மாக நடந்தது. பெருமாள், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதிகாலை, வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து, அலங்கார பல்லக்கில், பாரிவேட்டைக்கு புறப்பட்டார். பூஞ்சேரி, பெருமாளேரி, வடகடம்பாடி, நல்லான்பிள்ளைபெற்றாள், காரணை, குச்சிக்காடு கிராமங்கள் வழியாக சென்றபோது, கிராம மக்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். குழிப்பந்தாண்டலம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலை அடைந்ததும், அங்கு நடந்த சிறப்பு வழிபாட்டிற்குபின், மாலையில் பாரிவேட்டையும், இரவில் வீதியுலாவும் நடந்தது. இன்று அதிகாலை மாமல்லபுர கோவிலை வந்தடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !