சோழவந்தான் மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம்
ADDED :170 days ago
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.
இங்கு சில நாட்களுக்கு முன்பு வேப்பமரம் விழுந்ததில் கொடிமரம் அடியோடு உடைந்தது. இதையடுத்து ஆகம விதிப்படி தற்காலிக புதிய கொடிமரத்திற்கான பாலஸ்தாபனம் நடந்தது. சுவாமி, அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சாந்தி, அஸ்திர ஹோமங்கள், ஸ்நபனாபிஷேகம் நடந்தது. கொடி மரத்திற்கு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. கண்ணன் பட்டர் தலைமையில் பூஜைகள் நடந்தன. அறநிலையத்துறை ஆய்வாளர் சாவித்திரி, நிர்வாக அலுவலர் கார்த்திகைச் செல்வி ஏற்பாடுகளைச் செய்தனர்.