பழநி முருகன் கோயில் ரோப்கார் சேவை ஏப்.16ல் நிறுத்தம்
ADDED :169 days ago
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் நிறுத்தப்பட உள்ளது.
பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை ஆகியவை உள்ளன. இதில் ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் கோயில் செல்ல முடியும். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஏப்.16 , நாள் முழுவதும் ரோப்கார் இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழநி கோயில் சென்றுவர வின்ச், படி பாதை, யானைப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தலாம்.